8 மாவட்டங்களுக்கு கொரோனா அபாயம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிக்கைகளின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, நாட்டின் எட்டு மாவட்டங்கள் பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாள்தோறும் கொரோனா தொற்றாளர்கள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், காலி, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களும் நாள்தோறும் அதிகபட்சம் 80 தொற்றாளர்கள் கண்டறியப்படும் இரத்தினபுரி மாவட்டமும், இந்த அபாய நிலையில் காணப்படுவதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ, தொற்றுப் பரவலின் உச்ச நிலையை தற்போது இந்த நாடு எதிர்கொண்டுள்ளது என்றும் எதிர்வரும் வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில், சுகாதாரத் துறையினர், தம்மாலான உயர்ந்தபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி, இந்நிலைமையைக் கட்டுப்படுத்த முடியான்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments