77 மணிநேரம் கடுமையானது
எதிர்வரும் திங்கட்கிழமை(17) அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் முழுநாட்டுக்குமான பயணத்தடை, கடுமையானதாக இருக்குமென தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அத்தியாவசிய தேவைகளின்றி, வெளியில் நடமாடமுடியாது என்றார்.
தனிமைப்படுத்தல் அல்லது பயண விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், மீறுவோருக்கு எதிராக, 6 வருடங்கள் தொடர் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 10ஆயிரம் ரூபாய் தண்டம் இன்றேல், இரண்டும் ஒரேதடவையில் விதிக்கப்படலாம் என்றார்.
13ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஆரம்பமாகி, மூன்று தினங்களுக்கு அமுலில் இருக்கும் இந்த பயணத்தடையின் போது, தேசிய அடையாள அட்டையைக் காணப்பித்து பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படாது என்றார்.
“சகல வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்: மருந்தகங்களைத் திறப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியேற முடியும் என்றுத் தெரிவித்த அவர், வைத்தியசாலைகள் மற்றும் மருந்துகளை வாங்க செல்வதற்காக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
மூன்று தினங்கள் முடிவடைந்ததன் பின்னர், திங்கட்கிழமை (17) காலை முதல் தேசிய அடையாள அட்டை முறைப்படி, வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறலாம் என்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments