ஏப்ரல் 5 ரமழான் வந்திருந்தால் முழு மக்களும் தப்பியிருப்பர்
பிரித்தானிய வைரஸ் குறித்து சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, நாட்டை முடக்கமாட்டோமென அறிவித்திருந்தவர்கள், நாட்டை முடக்கிவிட்டனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கத்தின் முடிவுகள், விஞ்ஞான பூர்வமாக எடுக்கப்படுகின்றனவா அல்லது வர்க்க ரீதியில் எடுக்கப்படுகின்றதா? என வினவினார்.
அரசாங்கத்தின் அரசியல் ஒழுங்குப்பத்திரத்திம் மற்றும் அவர்களின் வர்க்கரீதியான மனநிலையிலா, முடிவுகள் எடுக்கப்படுகின்றன என வினவிய அவர், ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்றே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ( 13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“முடக்கத்துக்குச் செல்லாமல் நாணயத்தாள்களை அச்சடித்து 5,000 ரூபாய் வழங்கி வீட்டிலிருப்பவர்களையும் வெளியே அனுப்பியது. மாத்திரமின்றி அவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் பற்றி ஆலோசனைகள் வழங்கவில்லை. மக்களுக்கு தேவையான முறையில் நடந்துகொள்ளலாம் என்ற மனநிலையை ஏற்படுத்தியதால்தான், கொரோனா தொற்று வியாபித்துள்ளது” என்றார்.
எமது, ரமழான் பண்டிகை ஏப்ரல் 5ஆஅம் திகதி வந்திருக்குமாயின், இந்த நாட்டில் உள்ள அனைவரையும் எம்மால் பாதுகாத்திருக்கலாம். அன்றையதினம், எமது பண்டிகை இருந்திருந்தால், தனிமைப்படுத்தல் சட்டத்தை கட்டாயமாக அப்போது,போட்டு இலங்கையை முடக்கி, மக்களையும் வீட்டுக்குள்ளே முடக்கியிருக்கும் என்றார்.
“வர்க்கவாத மனநிலை இருந்துகொண்டு எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களால், அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். கடந்த ஆண்டும் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற பிரச்சினை வரும் போது இவ்வாறான தீர்மானங்களை தான் அரசாங்கம் எடுத்தது” என்றார்.
எனவே, நாட்டை முடக்குவதற்கு, ரமழான் வரும்வரையிலும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இனவாத, மதவாத,வர்க்கவாத, தீர்மானங்களை எடுப்பதால் இந்த நாடு தொடர்ச்சியாக சிக்கல்களை எதிர்நோக்கும் என்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments