மேல் மாகாணத்தில் ஒரே நாளில் 1300 பேருக்கு கொரோனா உறுதி !
நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சீனப்பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் நேற்றுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினமே ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 2672 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 13 பேர் தவிர ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர். கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 800 ஐ கடந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் பயணிகள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்துள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாளுக்கு நாள் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுன்கு ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மேல் மாகாணத்தில் மாத்திரம் 1312 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய கொழும்பில் 755 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 323 தொற்றாளர்களும், களுத்துறையில் 234 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை காலியில் 228 தொற்றாளர்களும், இரத்தினபுரியில் 192 தொற்றாளர்களும் , கண்டியில் 127 தொற்றாளர்களும் மற்றும் பொலன்னறுவையில் 118 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.
எஞ்சிய 669 தொற்றாளர்களும் குருணாகல், யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, அம்பாறை, நுவரெலியா, வவுனியா, அம்பாந்தோட்டை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments