நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த இருவரும் தீவிரவாத போதனைகளை முன்னெடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை குடும்பங்களுக்கே இவர்களால் தீவிரவாத சித்தாந்தங்கள் குறித்த போதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில், “தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் மாவனெல்ல மற்றும் கம்பொலவைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைதுசெய்திருந்தது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து மடிக் கணினிகளையும் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றிய நிலையில், அந்த மடிக்கணினிகளை வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்து ஆய்வு செய்துள்ளதுடன் நிபுணர்களின் அறிக்கை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, மடிக் கணினிகளில் பல காணொளிகள் மற்றும் தீவிரவாதத்தின் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் படங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments