Header Ads

யாழ்.நல்லூரில் வீட்டுக்குள் புதையல் தேடப்பட்டதா..? பொலிஸார் விசாரணை



யாழ்.நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் பூஜை அறையில் குழி தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

குறித்த வீட்டில் இராணுவத்தினர் எனக் கூறிய சிலர் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதாக நேற்று நண்பகல் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எனினும் அங்கு அகழ்வுப் பணியை முன்னெடுத்தோர் பொலிஸாரின் வருகை அறிந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸ் விசாரணையின்போது வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளார். அவர் தானே சுவாமி அறையின் நிலத்தை கொத்தியதாகவும் கூறியுள்ளார்.

யாழ். நல்லூர்ப் பகுதியில் சங்கிலியன் மன்னன் ஆண்டதால் அப்பகுதியில் புதையல் இருக்கலாம் என்ற சிந்தனை அங்கு குடியிருப்போரை சிந்திக்கத் தூண்டியதா, இல்லையேல் ஏற்கனவே புதையல் யாருக்கேனும் கிடைத்ததா என பொலிஸார் சந்தேகம் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.