Header Ads

மட்டக்களப்பில் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர்..!


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை வியாழக்கிழமை (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுவித்துள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிபரை புதன்கிழமை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து இன்று வியாழக்கிழமை (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.