நாட்டின் வானிலை தொடர்பாக வெளியான அறிவிப்பு
இலங்கையின் வானிலையில் இன்று மாலை அல்லது இரவில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கடும் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைகளை எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் கோரியுள்ளது.
No comments