Header Ads

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும்


புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சந்தைகளில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.