Header Ads

யாழ் ராமநாதன் கல்லூரியில் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா: தற்காலிகமாக மூட உத்தரவு !



யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி இன்று முதல் தற்காலிகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அதிபர், ஆசிரியர் என இருவர் உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.