Header Ads

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு!


யாழ். வடமராட்சி பகுதில் உள்ள கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றினை குறித்த நபர் எடுத்து திறந்து பார்த்துள்ளார். அதனுள் திரவம் இருந்துள்ளது. அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளார்.

அதனை அருந்தி சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார். அதனை அங்கிருந்தவர்கள் அவதானித்து அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments

Powered by Blogger.