சீன தடுப்பூசி இலங்கையில் பயன்படுத்தப்படாது – சுகாதார அமைச்சு
இந்த விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சினோபார்ம் தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன், தொற்று நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன் இலங்கையர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
தடுப்பூசியின் பாதுகாப்பை தொற்று நோய்கள் மற்றும் ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஆகியவை தீர்மானிக்கும் என்றும் வன்னியராச்சி கூறினார்.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.
தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், அது பயன்படுத்தப்படும் மக்கள் குழுக்கள் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சினோபார்ம் தடுப்பூசி இதுவரை இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த தடுப்பூசியின் ஆயுள் 2023வரை இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
சீனா பரிசளித்த 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வந்தன.
எனினும் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே அந்த தடுப்பூசிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments