தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு
தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிவதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பது குறித்த யோசனையொன்று நாடாளுமன்றத்தில் நாளை (திங்கட்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த குழுவிற்கு 15 உறுப்பினர்கள், சபாநாயகரினால் தெரிவு செய்யப்படுவதுடன் குறித்த குழு 6 மாதத்துக்குள் தங்களது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் தொடர்பாக ஆராயும் ஆளும் கட்சியின் கூட்டம் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments