கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் – சுகாதார அமைச்சு
நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என கூறினார்.
ஆகவே முக்கவசம் அணிவதுமற்றும் சமூக விலகல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை அங்கீகரிக்க கணிசமான தரவுகளைப் பெற்றுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
இருப்பினும் நிபுணர் குழு ஒப்புதல் வழங்க இன்னும் தரவுகள் அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், விரைவில் இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments