இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சில ஊடகவியலாளர்களினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் சிலர் அரச வாகனங்களை பயன்படுத்தி தங்களை கண்காணிப்பதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments