முன்பள்ளிகளின் பௌதீக பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு மிகவிரைவில் தீர்வு – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உதிர்நோக்கும் சம்பளப் பிரச்சனை உட்பட பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முன்பள்ளி இராஜாங்க அமைச்சர் றியால் நிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவவட்டத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அழைப்பின் பேரில் முன்பள்ளி இராஜாங்க அமைச்சர் றியால் நிசாந்த டி சில்வா மட்டக்களப்பிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வின்சன்ட் தேசிய பாடசாலை கல்வி சமூகத்திருடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
வின்சன்ட் தேசிய பாடசாலைக்கு அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சகிதம் இராஜாங்க அமைச்சர் றியால் நிசாந்த டி சில்வா விஜயம் மேற்கொண்;டு பாடசாலை கல்வி சமூகத்தினருடனான கலந்துரையாடவில் அந்த பாடசாலையின் பௌதீகவள பற்றாக்குறைகளான கட்டிடவசதி விஞ்ஞான ஆய்வுகூடவசதி கணணி அறை மற்றும் ஆரம்பகல்வி கட்டிடம் முடிவு பெறாத நிலையில் இருக்கின்றது போன்ற பல்வேறு தேவைகள் தொடர்பாக பாடசாலை சமூகம் எழுத்துமூலம் கோரிக்கையினை அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்
எனவே இராஜாங்க அமைச்சர் அவரின் செயலாளர் பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறையை தேவைகளை பூர்தி செய்துதருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.
அதேவேளை முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ”மட்டக்களப்பு மாவட்டத்தில 900 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் 533 முன்பள்ளி பாடசாலைகள், இதில் பதிவு செய்யப்படாத முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 1300 க்கு மேற்பட்டோர் உள்ளனர் இவர்களது சம்பளம் பிரச்சனை தொடக்கம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர். இவர்களுடைய மாதாற்த சம்பளம் 4 ஆயிரம் ரூபா என்பது அவர்களுடைய உடைகளுக்கே போதாது.
கடந்த ஆட்சிக்காலத்திலே முன்பள்ளி தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்பாக அவர்களுடைய கற்றல் கற்பித்தல் மற்றும் பௌதீக பற்றாக்குறை தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை குழந்தைகளின் கல்வி பரிநாபம் முன்பள்ளி கல்வியே முக்கியமானது ஆகவே முன்பள்ளியை கவனமெடுக்கவேண்டும்.
தற்போது ஜனாதிபதி நாட்டை சுபீட்சத்தை நோக்கி கட்டியொழுப்பும் நோக்கத்துக்கு அமைய முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்க்காக ஒரு இராஜாங்க அமைச்சு இருக்கின்றது அதேவேளை பசில் ராஜபஷ முன்பள்ளியை பலப்படுத்து இன்னும் பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
எனவே இந்த முன்பளிகளின் பௌதீபவள குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்தி செய்து தீர்க்கப்படும் என முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
No comments