இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்து, 93 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 856 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 326 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments