வார இறுதி நாட்களில் RER B தொடருந்து சேவை தடை
வார இறுதி நாட்களில் RER B தொடருந்து சேவை தடைப்பட உள்ளது.
நாளை சனிக்கிழமை மார்ச் 13 ஆம் திகதி மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 14 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் இந்த சேவை தடைப்பட உள்ளன.
Gare du Nord நிலையத்தில் இருந்து harles-de-Gaulle விமான நிலைய நிறுத்தம் வரை இந்த சேவைகள் தடைப்பட உள்ளன.
பல்வேறு திருத்தப்பணிகளின் காரணமாக இச்சேவைகள் தடைப்பட உள்ளன. சமிக்ஞை விளக்குகள் பழுது பார்த்தல், ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றம் செய்தல் என இந்த தடத்தில் பல்வேறு திருத்தப்பணிகள் இந்த இரு நாட்களிலும் இடம்பெற உள்ளன.
No comments