Header Ads

OL பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்!



கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு பாதிப்பினை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறான குழப்பங்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாட்டின் சகல காவல்நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சை மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.