Header Ads

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் Jean Castex ஊடக சந்திப்பு

 இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் Jean Castex ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பாக்கப்பட்டுள்ளது. 

 
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரதமரின் அறிவிப்புகளை இந்த இணைப்பில் நேரலையாக படிக்கலாம். (பக்கத்தை Refresh செய்யவும்) 
 
18.30 : அதிக தொற்று கொண்ட மாவட்டங்களுக்கு என 135.000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
 
18.26 : மார்ச் 15 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களில் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
50 இல் இருந்து 74 வயதுக்குட்பட்டவர்கள் நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். இதற்கு எவ்வித மருத்துவரின் பரிந்துரை கடிதங்களும் (prescription médicale) தேவையில்லை என பிரதமர் தெரிவித்தார்
 
18.24 : ஏப்ரல் நடுப்பகுதிக்குள் குறைந்தது 10 மில்லியன் மக்கள் தங்களது முதல்கட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுவிடுவார்கள் என பிரதமர் Jean-Castex தெரிவித்தார்.
 
18.21 : முன்னதாக “தீவிர கண்காணிப்பு வலையமாக” 20 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்கள் இதில் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hautes Alpes, Aisne மற்றும் Aube ஆகிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு தற்போது 23 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
18.19 : <<மாகாணங்களுக்கிடையேயான பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். <<நெருக்கடியான இடங்களுக்கு பயணிப்பதை தவிப்பதன் மூலம் நாம் கொரோனா பரவலை இலகுவில் தடுக்கலாம்!>> என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
 
18.12 அதிக தொற்று உள்ள மாவட்டங்களில் 10.000 சதுர மீற்றர் பரப்பளவுக்கு மேற்பட்ட உணவு விற்பனை தவிர்ந்த கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றதாக பிரதமர் Jean Castex தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் முகக்கவசங்கள் அணிந்து பயணிக்க வேண்டும். அனைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் தடை விதிக்கப்படுகின்றது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். <<எங்கெல்லாம் வைரஸ் தொற்று பரவவில்லையோ... அங்கெல்லாம் நாம் புதிதாக தொற்றினை பரப்பாமல் இருக்க வேண்டும்!>> எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
 
18.05 : பா து கலேயில் வார இறுதி ஊரடங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Jean Castex தெரிவித்தார். அதன்படி, சனிக்கிழமை காலை 8 மணியில் இருந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை முழு நேர ஊடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த கட்டுப்பாடு அடுத்த வாரமும் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
 
18.02 : நாம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. <<நாம் பயந்ததை விட குறைவாகவே வைரஸ் பரவி வருகின்றது.>> என தெரிவித்த பிரதமர், << முதல் இரண்டு தொற்று அலையில் நாம் சந்தித்திருந்த அதிவேக தொற்றினை நாம் தற்போது எதிர்கொள்ளவில்லை!>> என தெரிவித்தார்.
 
 
17.53 : அரசு 765.000 கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளதாக direction générale de la santé (DGS) அறிவித்துள்ளது. அனைத்தும் AstraZeneca தடுப்பூசிகள் என அறிய முடிகிறது.
வரும் வாரத்தில் 33.000 மருத்துவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
17.43 : நாடு முழுவதும் மிகப்பெரிய அளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவு பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது.
 
 
17.38 Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உமிழ் நீர் மூலம் பரிசோதிக்கப்பட்டதில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல் து பிரான்சுக்குள் 1.000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு (மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து) உமிழ்நீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

No comments

Powered by Blogger.