Header Ads

வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!



வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீவன் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.