Header Ads

நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து!


சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி (சி.பி.எஸ்.எல்) மற்றும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (பி.பி.ஓ.சி)  ஆகியற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் குறித்த  உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகளவு சீனப் பொருட்களே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்தவகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில், சீன இறக்குமதி, 3.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.