Header Ads

பிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசம்

 


பிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசமடைவதாகப் பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில்


கடந்த 24 மணி நேரத்திற்குள்  29.759   பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.   இதனால் பிரான்சில்  மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைத் தாண்டி 4.045.319    ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 169  பேர் சாடைந்துள்ளனர்.   இதனால் மொத்தச் சாவுகள் 90.315   இனைத் தாண்டியுள்ளது.

வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 64.978   (+169) பேர் சாவடைந்துள்ளனர்.  மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174 பேர் சாவடைந்துள்ளனர்

24.671  கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.

4.070   பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
இல்-து-பிரான்ஸ் ஆபத்தின் விளிம்பில் உள்ள நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துரித கதியில் சில தீவிர சிகிச்சை நோயாளிகள் வான்வழி மூலம் வேறு இடங்களிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரான்சில்169 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (13.03.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும்  39 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.645  ஆக உயர்ந்துள்ளது.

இங்கு 5.714 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.100    பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 96% ஆகும்.


இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.177 பேர் -   3.377 பேர் சாவு  (+8)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  882 பேர் - 1.880 பேர் சாவு (+2)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 664 பேர் - 2.322 பேர் சாவு (+4)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 867 பேர் -  2.124 பேர் சாவு (+4)
    Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  503 பேர் - 1.439 பேர் சாவு (+6)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  498 பேர் - 1.511 பேர் சாவு (+4)
    L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 615 பேர் -  1.444 பேர் சாவு (+5)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  528 பேர் -  1.548 பேர் சாவு (+6)

No comments

Powered by Blogger.