இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் மேலும் 331 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 238ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 84 ஆயிரத்து 969 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 737 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கம்பஹா, கொச்சிக்கடை, பமுனுகம மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், 61, 76, 78, 86 மற்றும் 94 வயதுடைய மூன்று பெண்களும் இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments