தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்!
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.
விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார். நேற்று நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடுகளை உறுதிசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.
இலங்கை மீது வாக்கெடுப்புடன் புதிய தீர்மானம் எடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஐ.நா அறிக்கை 2009 மே 18 ஆம் திகதி முடிவடைந்த மோதலில் கவனம் செலுத்தும். பெரும்பாலும் ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியது.
No comments