இலங்கைக்கு பொருளாதார தடை…!
இலங்கைக்கு குறிப்பிட்ட துறைகளில் பொருளாதார தடையை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த 23ம்திகதி மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அட்டூழியங்கள் மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக குறிப்பிட்ட துறைகளின் கீழ் இலங்கைக்கு பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிக்கு பாரப்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments