மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து 169 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு புறப்பட்ட 11 விமானங்களில் 691 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
விமானத்தில் பயணித்தவர்களில் 116 பேர் கட்டாருக்கும், 100 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கும் சென்றுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், அமெரிக்கா, நோர்வே மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்
No comments