ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று!
ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் (திங்கட்கிழமை) முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.
முதலாம் ஆண்டு நிகழ்வுகள் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றாக முன்னிற்போம் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனத்தின் தொனிப்பொருளாகும்.
கட்சித் தலைவரான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் சம்மேளனத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
No comments