லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!
பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதேவேளை தாக்கப்பட்ட லொறி ஓட்டுநரின் சாரதி உரிமம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் லொறி சாரதியை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிவந்தமை குறிப்பிடத்தக்கது
No comments