Header Ads

யாழ். மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது!


யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை முதல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தன்னுடன் நேரடியாக தொடர்புபட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments

Powered by Blogger.