Header Ads

வவுனியா புகையிரத கடவையில் அதிகரிக்கும் விபத்துக்கள்..!


வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல்,

புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை எமது பிராந்திய செய்தியாளர் ஒளிப்பதிவு செய்த படங்கள், இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவதற்குறிய நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்வார்களா என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.