Header Ads

Action Logement உடைய 150 யூரோ பெறக்கூடியவரா நீங்கள் !

 


சுகாதார நெருக்கடி காலத்தில் உங்கள் சம்பளம் வழமையைவிட குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்களும் இவ்வுதவியைப் பெறலாம். உதவி பெறக்கூடியவராக இருக்கும் பட்சத்தில், அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு, மாதாந்தம் 150€ வைப் பெறமுடியும்.

பயனாளர் யார்?
• நீங்கள் வீட்டு உரிமையாளராகவோ அல்லது வாடகைக்கு குடியிருப்பவராகவோ இருக்க வேண்டும்.
• ஏற்கனவே தனியார் அல்லது விவசாயம் போன்ற வேறு துறைகளில் வேலை செய்தவர்கள், தற்போதைய நெருக்கடி காலத்தில் வேலை இழந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள்.
• பகுதி நேர வேலை செய்பவராக அல்லது chômage partiel காரணமாக 15% வருமான இழப்புடையவராக அல்லது நெருக்கடி காலத்தில் வேலை இழந்தவராக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலை செய்பவராக இருந்தால் அவற்றின் தேறிய தொகைகளின் மொத்தமானது 1230€-1845€ குள்ளாக இருக்க வேண்டும்.
• இணையதளத்திலுள்ள 'tester son éligibilité' பகுதியில் தகவல்களைக் கொடுத்து, நீங்கள் உதவி பெறக்கூடியவரா என்பதை ஒருமுறை பரிசீலிக்கலாம். ஆம் எனில் www.actionlogement.fr க்குச் செல்லுங்கள்.
நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..📄


No comments

Powered by Blogger.