2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் – அரசாங்கம்
2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார உற்பத்திக்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிதார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உறையாற்றிய அவர், தாற்போது 33% மின்சாரத்தை உற்பத்தி செய்ய டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.
எனவே 2025 ஆம் ஆண்டளவில் குறித்த பயன்பாட்டை மேலும் 5% ஆகக் குறைக்கவும் 2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
No comments