19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!
19 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 38 வயதான நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது கள்ளக்காதலியின் மகனின் மனைவியையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறை குறிப்பிடுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தேக நபர் பல முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments