Header Ads

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கைக்கு விஜயம்!


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி அவர் இன்று மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைவாரென அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரரை வரவேற்கவுள்ளார். பின்னர் இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கையை வௌியிடவுள்ளனர். இதேநேரம், பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சரினால் வழங்கப்படும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து,  நாவல – கிரிமண்டல மாவத்தையில் உயர் மட்டத்திலான மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் நாளை பிற்பகல் 03 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளார்.

No comments

Powered by Blogger.