Header Ads

பாடகர் எஸ்.ஜி.சாந்தனுக்கு மாங்குளத்தில் சிலை!



ஈழத்தின் புகழ் பூத்த பாடகரும் உலகத்தமிழ் உறவுகள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்த எஸ் ஜி சாந்தன் அவர்களுக்கு மாங்குளத்தில் சிலை அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது

கடந்த 11.02.2021 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இரண்டாவது சபை அமர்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமார் தலைமையில் இடம்பெற்றது

இதன் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களால் குறித்த பிரேரனை சபையில் கொண்டு வரப்பட்டது

இதனை தொடர்ந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து குறித்த பிரேரனை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சுற்றுச்சூழல் வாழ்வசதி குழுவினால் குறித்த மாங்குளம் நகர்ப் பகுதியில் பிரேரனை கொண்டுவந்த உறுப்பினர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று இடங்களில் பொருத்தமான இடத்தை தொரிவுசெய்து அந்த இடத்தில் சிலை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது

குறித்த பிரேரனை கொண்டுவந்த உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எமது மாங்குளம் மண்ணில் இறுதிவரை வாழ்ந்து தனது இசையால் அனைவரையும் கொள்ளைகொண்ட மனிதருக்கு சிலை அமைக்க பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது

அத்தோடு எதிர்வரும் 26.02.2021 அன்று அவருடைய நினைவு தினம் வருடந்தோறும் இந்த நினைவு தினத்தை பிரதேச சபை ஊடக அனுஸ்ரிப்பதற்கு கோரிக்கை விடுத்தேன் அதற்கமைய எமது ஆளுகைக்கு உட்பட்ட சனசமூக நிலையம் ஊடக நிகழ்வு செய்வதற்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது

அந்த வகையில் எதிர்வரும் 26 ம் திகதி அவரது உயிர் பிரிந்த நேரமாகிய 2.31 மணிக்கு மாங்குளம் பிரதேச சபை கட்டிட மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.