ஐ.நா. ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கான பதில் – தினேஷ் வெளியிட்ட தகவல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏதாவது இடம்பெற்றால் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய மாத்திரமே அது குறித்து செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரைஇ கொரோனா பரவல் காரணமாக இணையவழி காணொளி முறையில் முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments