பிரான்சின் ஒன்பது பிராந்தியங்கள் கொரோனத் தொற்றினால் ஆபத்தானவை!!
பரிசை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ், மாரசெய் நகரை உள்ளடக்கிய Provence-Alpes-Côte-d’Azur உட்பட, பிரான்சின் ஒன்பது பிராந்தியங்கள் கொரோனத் தொற்றினால் ஆபத்தானவை என சுவிற்சர்லாந்து அறிவித்துள்ளது.
கடந்த எட்டாம் திகதியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்கியிருந்து விட்டு சுவிற்சர்லாந்திற்குள் நுழைபவர்கள் கட்டாயமாக 72 மணித்தியாலங்களிற்கு உட்பட்ட கெரோனாவிற்கான PCR பெறுபேறுகளுடன் மட்டுமே உள் நுழைய முடியும்.
கொரோனத் தொற்று இல்லை என்ற பெறுபேறுகளுடன் (Négatif) நுழைந்தாலும், அவர்கள் கட்டாயமாக பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என சுவிற்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை 22ம் திகதியில் இருந்து தீவிரப்படுத்தப்படும்
இல்-து-பிரான்சில் அறிவிக்கப்படும் கெரோனாத் தொற்றுக்களில் 37% ஆனவை பிரித்தானிய வைரஸ் தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.
No comments