கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 743 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 13 பேரும், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 18 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 346 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 664 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, விலஓய, பிலியந்தலை, கொச்சிக்கடை, அம்பலாங்கொடை மற்றும் நயினாமடம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.
No comments