Header Ads

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்



பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார்.

இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் திகதி பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல் விட்டிருந்தால் அந்தப் பேரணி பொத்துவிலோடு முடிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை சொல்வது தவறு என குறிப்பிட்ட அவர், சுமந்திரனும், சாணக்கியனும் வழங்கிய பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.