Header Ads

ஜெர்மனியில் பயங்கர தீ விபத்து! பலர் படுகாயம்…


 ஜெர்மனியில் பெர்லின் நகரில் அமைந்துள்ள அகதிகள் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.