Header Ads

கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகிய புதிய ஆய்வு…

 


பிரித்தானியாவில் புதிய ஆய்வில், Pfizer/BioNTech தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட 21 நாட்களுக்குப் பிறகு, அதாவது இரண்டாவது டோஸ் தேவையில்லாமல், கொரோனாவிலிருந்து மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கியதாகக் கண்டறிப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் East Anglia பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகளை பகுப்பாய்வு நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இஸ்ரேலில் ஏற்கனவே Pfizer/BioNTech தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி 90 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வின் முடிவு இரண்டாவது டோஸ் போடும் நேரத்தை தாமதப்படுத்தும் பிரித்தானியாவின் திட்டங்களுக்கு பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

இரண்டாவது டோஸ் போடாமல் 21 நாட்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் அறியப்படவில்லை.

அடுத்த ஒன்பது வாரங்களில் இது பெரும்பாலும் குறைய வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Pfizer/BioNTech தடுப்பூசி போட்டப்பிறகு முதல் எட்டு நாட்களில் தொற்றுநோய்க்கான ஆபத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.