பிரான்சில் உச்சமடைந்துள்ள நிலையில் நாளை வியாழக்கிழமை பிரதமர் உரை!!
கொரோனாப் பரவல் பிரான்சில் உச்சமடைந்துள்ள நிலையில் பிராந்தியவாரியான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளன.
இதனடிப்படையில், இன்று சுகாதார அவரசப் பாதுகாப்பு ஆலோசனை சபையை ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கூட்டியிருந்தார்.
இதன் முடிவில் ஊடகங்களிற்கு செய்தி வழங்கிய அரசாங்கத்தின் பேசவல்லவரான் கப்ரியல் அத்தால், நாளை வியாழக்கிழமை பிரதமர் உரை நிகழ்த்தி ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்கும் பதிலளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments