Header Ads

பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளால் பெரும் பரபரப்பு! எச்சரிக்கும் நிபுணர்கள்

 


கொரோனா அபாயம் மிகுந்த 33 நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகள், கட்டாயமாக 10 நாட்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் போரிஸ் அரசு அறிவித்துள்ளது.

இதற்கு கட்டணமாக 1,750 பவுண்டுகள் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 15ம் திகதி முதல் இந்த புதிய கட்டுப்பாட்டை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனால் பயணிகள் பலர் பிரித்தானியாவுக்குள் படையெடுத்து வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் அரசு அறிவித்துள்ள அந்த 33 சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து என கூறப்படுகிறது.

அதிக கட்டணம், 10 நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்துதல் என இருப்பதால், அதை தவிர்ப்பதற்காகவே ஒரு நாள் முன்னதாக பலர் பிரித்தானியா திரும்பியுள்ளனர்.

இதனால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்துதலும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.