இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் தீவிர சிகிச்சைப்பிரிவு நிரம்பும் ஆபத்து!!
பிரான்சில் வைத்தியசாலையில் 328 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (19.02.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 73 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.429 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 4.953 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 756 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 66% ஆகும்.
100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 243 ஆக மீண்டும் அதிகரித்துள்ளது.
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் 908 பேர் - 3.114 பேர் சாவு (+10)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் 658 பேர் - 1.752 பேர் சாவு (+7)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் 593 பேர் - 2.176 பேர் சாவு (+14)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 794 பேர் - 1.945 பேர் சாவு (+16)
Les Yvelines- வைத்தியசாலையில் 567பேர் - 1.334 பேர் சாவு (+4)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் 386 பேர் - 1.382 பேர் சாவு (+8)
L'Essonne- வைத்தியசாலையில் 620 பேர் - 1.305 பேர் சாவு (+5)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் 427 பேர் - 1.431 பேர் சாவு (+9)
No comments