நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை பகுதியைச் சேர்ந்தவன் என கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments