மனித உரிமைகள் தொடர்பாகவே ஐ.நா. ஆராய்கிறது !
மனித உரிமைகள் பேரவை பயங்கரவாதிகளின் மனித உரிமைகள் தொடர்பாகவே ஆராய்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், போரின் போது காணாமல் போன அல்லது இறந்த வீரர்களின் குடும்பங்களின் மனித உரிமைகள் குறித்து ஆராயவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு போரின்போது, தங்கள் கணவன், தந்தை மற்றும் மகன்களை இழந்தமையினால் பெண்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மனித உரிமைகள் பேரவை அவர்களைப் புறக்கணித்துவிட்டு பயங்கரவாதிகளுடன் ஒத்துப்போகிறமையை ஏற்றுக்கொள்ள முடியாதது என அசோக்க பிரியந்த கூறினார்.
மனித உரிமைகள் பற்றி பேசும்போது மனித உரிமைகள் ஆணையாளர் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments