நியூசிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவல்….. பிரதமரின் முக்கிய அறிவிப்பு
நியூசிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகின்றது.
அதனால் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனை அடுத்து ஆக்லாந்தில் 3-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இறுதியில் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
No comments