Header Ads

வடக்கு- கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் உருவாகியுள்ளன- கெஹலிய



வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் பல உருவாகியுள்ளன என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் மீண்டும் உருவாகியுள்ளன.

இதேவேளை நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

ஆகவேதான் தற்போது புலனாய்வு துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்  புலனாய்வு துறை பலப்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.