இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் இம்ரான் கான்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளார்.
இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில், இம்ரான் கானின் நாடாளுமன்ற உரைக்கான ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 10 வது வெளிநாடு ஒன்றின் தலைவராக இம்ரான் கான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments